Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

நாளை முடிவடைகின்றது பேரறிவாளனின் பரோல்

In இந்தியா
Published: 06:25 GMT, Sep 23, 2017 |
0 Comments
1175
icon_com
This post was written by : Kemasiya
aa-Cover-j85md40csp90dd0a6lhfhbp2r7-20170501134442.Medi

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளியென அறிவிக்கப்பட்டு கடந்த 26 வருடங்களாக சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு கொடுக்கப்பட்டிருந்த ஒரு மாதகால பரோல் நாளையுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகின்றது.

இருபத்தாறு வருட கால சிறை வாழ்க்கையில் இது தான் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள முதல் பரோல் ஆகும். பேரறிவாளனின் தந்தை குயில்தாசனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட காரணத்தினால் கடந்த ஓகஸ்ட் 24 ஆம் திகதி இரவு ஒரு மாத கால பரோலில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

பரோலில் வெளிவந்த நாள் முதல் நேற்று மாலை வரையிலும் 1 657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் நாளை 5மணிக்குள் அவர் மீண்டும் வேலூர் சிறையில் அடைக்கப்படவுள்ளார். இந்த நிலையில் பேரறிவாளனின் தாய் அற்புதாம்பாள் தன் மகனின் பரோல் காலத்தை நீடித்து தரும்படி கேட்டிருந்தார். ஆயினும் அவருடைய கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg