Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசின் நோக்கம் சேவையே: பிரதமர் மோடி

In இந்தியா
Published: 07:51 GMT, Sep 23, 2017 |
0 Comments
1178
This post was written by : Kemasiya

அரசின் முக்கிய நோக்கம் நாட்டிற்கு சேவை செய்வதாகும். தேர்தலில்  வெற்றி பெறுவதல்ல. விலங்குகளின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்துவது பாராட்டத்தக்கவிடயமாகும். இதனால் மாநிலத்தில் உள்ள விவசசாயிகள் அதிக நன்மை பெறுவர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தனது தொகுதியான வாரணாசிக்கு இரண்டு நாள் அரச பயணம் மேற்கொண்ட மோடி இன்று காலை (சனிக்கிழமை) உத்தரப்பிரதேசத்தின் விலங்குகள் மருத்துவ முகாமை தொடக்கி வைத்தார். இதன் போது விவசாயிகளிடம் உரையாற்றிய மோடி மேற் கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

விலங்குகள் அரச முகாமை நடத்திய உத்தரபிரதேச அரசிற்கும், முதல்வர் யோகி ஆதித்யாவிற்கும் எனது வாழ்த்துக்கள். எனது 5 வருட ஆட்சிக் காலத்தை நமது சுதந்திர போராட்ட தியாகிகள் விரும்பிய இந்தியாவாக உருவாக்க வேண்டும் என்பதே நோக்கம்.

இதேபோன்று, பால் மற்றும் கூட்டுறவு துறையில் முன்னேற்றங்கள் கொண்டுவருவது நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும். மேலும், அரசின் மண் பரிசோதனை அடையாள அட்டை விவசாயிகளுக்கு கூடுதல் நன்மை தருவதாக இருக்கும்.

எங்களைப் பொருத்தவரை வாக்குகளை பெறுவதற்காகவோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காகவோ ஆட்சி நடத்தவில்லை. நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிக்கிறோம். கட்சியை விட நாடே நமக்கு முக்கியம். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை நேற்று வாரணாசிக்கு இரண்டு நாள் அரச சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி நேற்றய தினம் (வெள்ளிக்கிழமை) வாரணாசியில் உள்ள ஷகன்ஷக்பூர் கிராமத்தில் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக கழிவறை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg