Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

எண்ணெய் விநியோக கட்டுப்பாட்டுக்கும் ஆடை ஏற்றுமதி தடைக்கும் சீனா தீர்மானம்

In உலகம்
Published: 07:27 GMT, Sep 23, 2017 |
0 Comments
1113
icon_com
This post was written by : Suganthini
china

வடகொரியாவுக்கான எண்ணெய் விநியோகத்தைக் கட்டுப்படுத்தவும் வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளைக் கொள்வனவு செய்வதை நிறுத்தவும் சீனா நடவடிக்கை எடுத்துள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையை அடுத்து, அந்நாடு மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையைத் தொடர்ந்து, சீனா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய உற்பத்திகளுக்கான கட்டுப்பாடு எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும் என்பதுடன், இயற்கை எரிவாயு ஏற்றுமதி உடனடியாக நிறுத்தப்படும் என, சீனாவின் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இருப்பினும், ஐ.நா. பாதுகாப்புச் சபையால் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, சிறிய அளவு எண்ணெய் மாத்திரம் வடகொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எனவும் அந்த அமைச்சு கூறியுள்ளது.

மேலும் சீனாவானது, வடகொரியாவின் முக்கிய வர்த்தகப் பங்காளி நாடாகும். இந்நிலையில், வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவது, அந்நாட்டின் வருவாயில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதேவேளை, சீனாவின் எண்ணெய் ஏற்றுமதியானது பெற்றோலியத்துறை உற்பத்தியில் முக்கியமானதொரு ஏற்றுமதியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளை நடத்தியுள்ளதைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பம் மீது பதற்றமான சூழ்நிலை அதிகரித்துக் காணப்படுகின்றது.

அத்துடன், வடகொரியாவின் இந்தச் செயற்பாட்டால் அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் முறுகல் நிலைமை ஏற்பட்டுள்ளதுடன், வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தன.

செப்டெம்பர் 3ஆம் திகதி, ஆறாவது சக்திவாய்ந்த அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நடத்தியதைத் தொடர்ந்து, வடகொரியா மீதான பொருளாதாரத் தடையை ஐ.நா. பாதுகாப்புச் சபை விதித்துள்ளது.

இந்தப் பொருளாதாரத் தடைக்கு சீனாவும் ரஷ்யாவும் ஆதரவு தெரிவித்திருந்தன.

இதன்போது, வடகொரியாவுக்கு எண்ணெய் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தவும் வடகொரியாவிடமிருந்து ஆடை வகைகளை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்குமான பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg