Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கென்யாட்டா அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றாரென குற்றச்சாட்டு

In உலகம்
Published: 08:07 GMT, Sep 23, 2017 |
0 Comments
1144
This post was written by : Suganthini

கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது, மோசடியான முறையில் அதிகளவான வாக்குகளைப் பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு கென்ய ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா முயற்சித்துள்ளதாக கென்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் ரைலா ஒடின்கா குற்றஞ்சாட்டியுள்ளார்.

கென்யாவில் நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போன்று, பின்னடைவான நிலைமைக்கு கென்யாவை, ஜனாதிபதி உஹுரு கென்யாட்டா கொண்டு செல்வதாகவும் அவர் கூறியுள்ளார்.

கென்யாவில் கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில், உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றிருந்தார்.

இதேவேளை, இவரை எதிர்த்துப் போட்டியிட்ட எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரைலா ஒடின்கா தேர்தலில் தோல்வி அடைந்தார்.

இந்தத் தேர்தலில், முறைகேடு இடம்பெற்றதாகக் கூறி எதிர்க்கட்சி ஜனாதிபதி வேட்பாளரான ரைலா ஒடின்கா உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அரசியலமைப்பை தேர்தல்கள் ஆணையகம் பின்பற்றவில்லை எனக் கூறியதுடன், எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதி மீண்டும் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு உத்தரவிட்டது.

இருப்பினும், இந்தத் தேர்தலை ஒக்டோபர் 17ஆம் திகதி நடத்துவது சாத்தியமின்றிக் காணப்படுவதாகவும் இதனால், ஒக்டோபர் 26ஆம் திகதி நடத்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் பிற்போடப்பட்டாலும் கூட, அரசியல் நெருக்கடிகளை கென்யா எதிர்நோக்காது என, சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg