Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தென் ஆபிரிக்க அணியை வீழ்த்துவதற்கு தயாராகும் பங்களாதேஷ் !

In விளையாட்டு
Published: 08:20 GMT, Sep 23, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Vithushagan
201709221812315706_South-Africa-are-our-next-step-says-Bangladesh-captain_SECVPF

இங்கிலாந்து, அவுஸ்ரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளை வென்ற எங்களின் அடுத்த இலக்கு தென்ஆபிரிக்காவை வீழ்த்துவது தான் என பங்களாதேஷ் அணியின் தலைவர் முஷ்பிகுர் ரஹிம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் அபாரமாக விளையாடி வருகிறார்கள்.

தற்போது டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ்அணி அதிக கவனம் செலுத்தி வருகிறது. சொந்த மண்ணில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலியாவிற்கு எதிரான டெஸ்டில் முதன்முதலாக வெற்றி பெற்று சாதனைப் படைத்தது.

தற்போது பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆபிரிக்கா சென்றுள்ளது. முதல் டெஸ்ட் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பிக்கிறது.

தென்ஆப்பிரிக்கா தொடர் குறித்து முஷ்பிகுர் ரஹிம் கூறுகையில் ‘‘பங்களாதேஷ்  கடந்த இரண்டு வருடங்களாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. எங்களுடைய முதல் இலக்கு, சிறப்பான ஆட்டத்துடன் செல்ல வேண்டும் என்பதுதான்.

எங்களுடைய சொந்த மண்ணில் விளையாடும்போது நாங்கள் அதிக உறுதியோடு இருந்தோம். அதே உறுதியோடு தென்ஆபிரிக்கா மண்ணில் விளையாடுவது எளிதானதல்ல. ஆனால், எங்களுடைய அடுத்தக்கட்ட நோக்கம் அதுதான். ஆப்பிரிக்க மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறோம். இது எங்களுக்கு சிறந்த வாய்ப்பு.

சாஹிப் அல் ஹசன் சிறப்பான வீரர். அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதுதான் வெற்றிக்கான முக்கிய விஷயம். ஆனால், தமீம் இக்பால், மெஹ்முதுல்லா, சபீர் ரஹ்மான், மொமினுல் ஹக்யூ போன்ற சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் உள்ளார்கள். அவர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன்’’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg