Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழர்களுக்கு சிறந்த அரசியல் தலைமை இல்லை: டக்ளஸ் தேவானந்தா

In இலங்கை
Published: 08:31 GMT, Sep 23, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Ravivarman
epdp (1)

தமிழர்களுக்கு சிறந்த அரசியல் தலைமை இல்லாத சூழல் காணப்படுகின்றது என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது மேலும் தெரிவிக்கையில்,”நாடாளுமன்றத்தில் புதிய அரசியல் யாப்பு வரைவு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஈழ மக்கள் ஜனநாயகக்கட்சியின் சார்பாக என்னிடம் கேட்கப்பட்டது. தமிழ் மக்கள் இலங்கையர்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தமிழர் என்ற அடையாளத்தை கைவிடவும், மாறாக தமிழராக இருக்க வேண்டும் என்பதற்காக இலங்கையர் என்ற அடையாளத்தை கைவிடத்தயார் இல்லை.

அவர்கள் இலங்கையர்களாகவும், தமிழராகவும் இருக்கவே விரும்புகின்றார்கள். கடந்த காலத்தில் இதை விளங்கிக்கொள்ளாத தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் தங்களது சுயலாப அரசியலுக்காக அதை ஆரோக்கியமாக எடுக்காத விளைவுதான் இந்நாடே இரத்தத்திலும், இருட்டிலும் மூழ்கடிக்கப்பட்டது.

இன்று அம்மக்கள் அதிலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறியிருந்தேன். மேலும் எம் கட்சி சார்பாகவும், எம்மக்கள் சார்பாகவும் இணைந்த வடகிழக்கில் மத்தியில் கூட்டாட்சி மாகாணத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டிற்கு அமைவாக மதசார்பற்ற அரசாகவும், 13வது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.

இதனால் இனங்களுக்கிடையே புரிந்துணர்வு வரும் போது கட்டம் கட்டமாக முன்னோக்கி செல்ல முடியும் என்ற கோரிக்கைகளை ஆரம்பகாலம் தொட்டு முன்வைத்திருந்தோம்” என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg