Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விரைவில் மற்றுமொரு தனியார் மருத்துவக் கல்லூரி: ராஜித

In இலங்கை
Updated: 08:55 GMT, Sep 23, 2017 | Published: 08:55 GMT, Sep 23, 2017 |
0 Comments
1253
This post was written by : Ravivarman

சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியை வழங்குவதற்கென இலங்கையில் மருத்துவக் கல்லூரியொன்று அமைப்பதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் அண்மையில் நடைபெற்ற சார்க் நாடுகளின் சுகாதார அமைச்சர்களுக்கான கூட்டத்தின்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இக்கல்லூரியை நிர்மாணிப்பதற்கான நிதி விரைவில் ஒதுக்கப்படும். மேற்படி திட்டத்திற்கான வரைபடம் இவ்வாண்டு டிசம்பர் மாதத்துக்குள் தயாராக்கப்படும்.

இக்கல்லூரியில் சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் மருத்துவக் கல்வியைத் தொடரக்கூடிய சூழ்நிலை உருவாக்கித்தரப்படும்” என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் ஏற்கனவே சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக பல்வேறுபட்ட பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ள நிலையில் அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg