Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நியூஸிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல்: சுமூகமான வாக்களிப்பில் மக்கள்

In உலகம்
Published: 09:02 GMT, Sep 23, 2017 |
0 Comments
1133
This post was written by : Suganthini

நியூஸிலாந்தில் நாடாளுமன்றத் தேர்தல் இன்று (சனிக்கிழமை) நடைபெற்று வருகின்ற நிலையில், வாக்களிப்பு நிலையங்களில் பொதுமக்கள் சுமூகமான வாக்களிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலையிட்டு, நியூஸிலாந்தின் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவுகின்றது.

இந்நிலையில், ஆளும் கட்சி சார்பில் 55 வயதான பில் இங்கிலிஸும் ( Bill English) எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியின் சார்பில் 37 வயதான ஜஸின்டா ஆர்டெர்னும்  ( Jacinda Ardern) போட்டியிடுகின்றனர்.

இதுவரையில் 9 இலட்சத்து 86 ஆயிரத்து வாக்குகள் பதிவாகியுள்ளன என, நியூஸிலாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும் பில் இங்கிலிஸ், தனது தேர்தல் பிரசாரத்தின்போது, கல்வித் திட்டத்துக்காக 370 மில்லியன் அமெரிக்க டொலர் முன்வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தமை  குறிப்பிடத்தக்கது. .

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg