Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் நடமாடும் சேவை!

In இலங்கை
Published: 09:09 GMT, Sep 23, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Ravivarman

இலங்கை மனித உரிமைகள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட நடமாடும் சேவை, கொட்டகலை விநாயகர் ஆலய மண்டபத்தில், இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.

இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் மத்திய மாகாணப் பணிப்பாளர் கந்தசாமி கலைச்செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில், அக்கரைப்பற்று மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் அந்தோனிசாமி பீட்டர் போல், பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

நடமாடும் சேவையின் போது 200 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், வலது குறைந்தோருக்கு பிளாஸ்டிக் கை பிரம்பு, சக்கர நாற்காலிகள் என்பன வழங்கப்பட்டன.

மேலும், 13 பாடசாலைகளை சேர்ந்த தலா 10 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டன. அத்துடன் இரத்ததான முகாமும் இடம்பெற்றதோடு கௌரவிப்பு நிகழ்வும், கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் அமைப்பின் முக்கியஸ்தர்கள், பத்தனை பொலிஸார், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

DSC09817 DSC09805 DSC09801 DSC09790 DSC09743 DSC09747 DSC09734

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg