Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

முச்சக்கரவண்டி விபத்து: மூவர் படுகாயம்!

In இலங்கை
Published: 09:43 GMT, Sep 23, 2017 |
0 Comments
1120
icon_com
This post was written by : Ravivarman

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

ஹற்றன் நகரத்திலிருந்து மஸ்கெலியாவிற்கு சென்று கொண்டிருந்த குறித்த முச்சக்கரவண்டி இன்று (சனிக்கிழமை) காலை ஹற்றன் – மஸ்கெலியா பிரதான வீதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

முச்சக்கரவண்டியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளதாகவும், மூவரும் பலத்த காயங்களுக்குள்ளாகி டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் ஒருவர் அதி திவீர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

DSC04399 DSC04380

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg