Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை பாராட்டினார் ஐ.நா. ஆணையாளர்

In இலங்கை
Published: 10:00 GMT, Sep 23, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Arul Jesu

காணாமல் போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கு இலங்கை எடுத்த நடவடிக்கையை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் பாராட்டியுள்ளார்.

அந்த அலுவலகத்திற்கான நியமனங்களை மேற்கொள்ளும் போது அனைத்து இனங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் நியமனங்களை வழங்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.

இதன்போதே ஆணையாளர் குறித்த விடயங்களை சுட்டிகாட்டியுள்ளதுடன், மேலும் முன்னேற்றத்தை அடைந்து கொள்வதற்கான பயணம் விரைவுபடுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.

எனவே காணி விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் போது இலங்கைக்கு முழுமையான உதவிகளை வழங்க ஐ நா மனித உரிமைகள் பேரவை தயாராகவுள்ளதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இலங்கை மனித உரிமைகள் மற்றும் நல்லிண விடயங்களில் திருப்திகரமான முன்னேற்றம் அடைந்து வருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன,  ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளருக்கு எடுத்து கூறியுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட முன்மொழிகள் முழுமைப்படுத்தப்பட்டுள்ளதை நேரில் காண அடுத்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் ஆணையாளருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

எனினும் ஒரு சில கடும் போக்குவாதிகள் எண்ணுவதனை போன்று உடனடியாக தீர்வுத் திட்டங்களை பெற்றுக் கொடுக்க முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

காணாமல்போனோர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் தான் கையொப்பமிட்டுள்ளதாகவும், அதன் நடவடிக்கைகள் செயற்திறனாக முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

பாதுகாப்பு படையினர் வசமுள்ள கிழக்கு மாகாணத்தின் அனைத்து காணிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், வடக்கில் உள்ள காணிகளில் குறிப்பிடத்தக்களவு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார்.

எஞ்சிய காணிகளில் நிர்வாக ரீதியான பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அவற்றை தீர்த்து முறையாக மக்களிடம் கையளிப்பதாகவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg