Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பச்சை குத்தும் நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்பு

In
Published: 10:50 GMT, Sep 23, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Suganthini

லண்டனில் பச்சை குத்தும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் அந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.

கிழக்கு லண்டனில் மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த நிகழ்வில், உலகளாவிய ரீதியிலிருந்து பச்சை குத்தும் வரைஞர்களும் பச்சை குத்திக்கொள்ள விரும்புபவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், 400க்கும் அதிகளவான பச்சை குத்தும் வரைஞர்கள் கலந்துகொண்டு பச்சை குத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர் என, நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கையில், தங்களுக்கு பிடித்த வெளிநாட்டு வரைஞர்களால் பச்சை குத்திக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்துள்ளது எனக் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg