Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கோஹ்லி படைத்த புதிய சாதனை!

In விளையாட்டு
Published: 11:13 GMT, Sep 23, 2017 |
0 Comments
2579
icon_com
This post was written by : Vithushagan
virat-fb_647_122416053212

இந்தியா வெற்றி பெற்ற கிரிக்கெட் போட்டிகளில் மொத்தமாக 10,000 ஓட்டங்களை குவித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையை விராட் கோஹ்லி படைத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தலைவர் விராட் கோஹ்லி துடுப்பாட்டம் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் நிலையில் தற்போது புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஒருநாள், டெஸ்ட், 20-20 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்ற ஆட்டங்களில் மட்டும் மொத்தமாக 10,000 ஓட்டங்களை கோஹ்லி தற்போது கடந்துள்ளார்.

இதை செய்துள்ள மூன்றாவது இந்திய வீரர் கோஹ்லி ஆவார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 92 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் இந்த சாதனையை கோஹ்லி எட்டியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் 17,113 ஓட்டங்களுடன் முதலிடத்திலும், ராகுல் டிராவிட் 10,860 ஓட்டங்களுடன் இரண்டாமிடத்திலும், விராட் கோஹ்லி 10,059 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

ஒட்டுமொத்த அணி வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் தலைவர் ரிக்கி பாண்டிங் 20,140 ஓட்டங்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg