Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

போலி ஆவணங்கள் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன மருந்துகள் மீட்பு!

In இலங்கை
Published: 15:49 GMT, Sep 23, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Ravivarman
image-0-02-06-6ad09ab43f3931f4e615ef9364425b3e472364a292b87a1009060116c48001f7-V

போலி ஆவணங்களைச் சமர்பித்து சீனா நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை க்ளைபோசேட் இராசயன மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கத்திணைக்கள ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன தெரிவித்தார்.

ஒருகொடவத்த சுங்கப்பிரிவு அதிகாரிகளினால் இந்த க்ளைபோசேட் இராசயன மருந்துகள் இன்று (சனிக்கிழமை) மீட்கப்பட்டுள்ளன.

யூரியா பசளை என போலி ஆவணங்களை சமர்ப்பித்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள தலா 4 லீற்றர் கொளவனவு கொண்ட 3948 கலன் கொண்ட 15792 லீற்றர் க்ளைபோசேட் இராசயன மருந்துகளே மேற்படி மீட்கப்பட்டுள்ளன.

இவற்றின் பெறுமதி 60 மில்லியன் ரூபாய் எனவும் இந்த இறக்குமதியாளர் தொடர்பிலான விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயவர்தன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg