Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகளுக்கு எச்சரிக்கை: சிவில் உடையில் பொலிஸார்!

In இலங்கை
Published: 16:46 GMT, Sep 23, 2017 |
0 Comments
1669
icon_com
This post was written by : Ravivarman
2014-07-03-1443

கொழும்பில் சில பகுதிகளில் சிவில் உடையணிந்த பொலிஸார் சிவில் உடையில் வாகனங்களில் சென்று வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகள் தொடர்பில் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

வாகன விபத்துக்களை குறைத்து ஒழுக்கமான சாரதிகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தின் அடுத்த நடவடிக்கையாக இன்று (சனிக்கிழமை) முதல் பொலிஸ் மா அதிபரினால் ஆரம்பித்து வைக்கப்பட உள்ளதாக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு தெரிவித்துள்ளது.

வீதி ஒழுங்குமுறைகளை மீறும் சாரதிகளை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் மேற்படி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கு முறைகளை மீறும் சாரதிகள் குறித்து, பொலிஸாருக்கு தகவல் வழங்கி சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸ் பிரிவு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg