Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

காணாமல் போனோர் அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல: பிரசாத் விளக்கம்

In இலங்கை
Updated: 07:39 GMT, Sep 24, 2017 | Published: 02:05 GMT, Sep 24, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Anojkiyan
kaari

காணாமல் போனோர் அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமே என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார்.

அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து ஆராயும் அலுவலகம் எவ்வாறு நடைமுறைப்படுத்தப்படும், இதுகுறித்து சர்வதேசம் என்ன கூறுகின்றது என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“காணாமல் போனோர் குறித்த அலுவலகம் அமைக்கபடவுள்ளமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேசமும் பாராட்டுகின்றன, இந்த அலுவலகத்தை அமைக்க நாங்கள் எடுத்த முயற்சியை வரவேற்றுள்ளன. காணாமல் போனோர் விவகாரம் என்பது பாரிய நெருக்கடியான விடயமாகும். வடக்கில் மட்டுமல்ல தெற்கிலும் காணாமல் போனோர் விவகாரம் உள்ளது. இது நீண்டகால பிரச்சினையாகும். இதனை தீர்க்கவேண்டிய பொறிமுறை எமக்கு தேவைப்பட்டது, சர்வதேச சமூகம் அடிக்கடி கவலைப்பட்ட விடயமாக இது காணப்பட்டது. எனவே அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு பொறிமுறை இல்லாமல் இதனை செய்ய முடியாது. எனவே இதனூடாக இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என நாம் நம்புகின்றோம். ஆனால் ஒரு விடயத்தை இங்கு குறிப்பிடவேண்டும், அதாவது காணாமல் போனோர் குறித்த அலுவலகம் என்பது நீதிமன்றம் அல்ல. மாறாக காணாமல் போனோருக்கு என்ன நடந்தது என்பதனை ஆராய்வதற்கான ஒரு பொறிமுறை மட்டுமேயாகும். அதனூடாக காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்து தீர்வு வழங்கப்படும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg