Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடக்கு முதல்வரின் செயற்பாடுகள் வருத்தமளிக்கின்றன: தெற்கு ஆளுநர்

In இலங்கை
Updated: 06:53 GMT, Sep 24, 2017 | Published: 02:46 GMT, Sep 24, 2017 |
0 Comments
1233
icon_com
This post was written by : Anojkiyan
hema

முதலமைச்சரிடத்தில் முன்னைய காலத்தில் இருந்த நல்லிணக்கச் செயற்பாடுகளை இப்போது காணமுடியவில்லை. இனவாத செயற்பாடுகளே அவரிடம் இப்போது இருந்து வருகின்றன. அவரின் இந்த நிலை குறித்து  கவலையடைவதாக மௌபிம மக்கள் கட்சியின் தலைவரும் தென் மாகாண ஆளுநருமான ஹேமகுமார நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

கட்சியினால் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“யாழ்ப்பாணத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் இராணுவம் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறைத்து மதிப்பிடக்கூடாது. முதலமைச்சருக்கு பாதுகாப்பு உத்தியோகத்தர் சுற்றி இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் வடக்கில் சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியிருப்பது பொலிஸாரும் இராணுவத்தினருமாகும்.

படையினரை வடக்கில் இருந்து வெளியேற்ற வேண்டும் என தெரிவித்துவந்த சிவாஜிலிங்கம், யாழ்ப்பாணத்தில் ஆவா குழு தலைதூக்கியபோது அவர்களை உடனடியாக கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அப்போது அவர்களுக்கு இராணுவமும் பொலிஸாரும் தேவையாகின்றது.

வடக்கிற்கு சமஷ்டி முறையிலான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், மாநாயக்க தேரரிடம் கோரியிருந்தாா். அதனை மாநாயக்க தேரர் மறுந்திருந்தாா். இவ்வாறான வடக்கு முதலமைச்சரின் அண்மைக்கால செயற்பாடுகள் வருத்தமளிக்கின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg