Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியாவின் கரையோரத்தில் பறந்துள்ள அமெரிக்க போர் விமானங்கள்

In உலகம்
Published: 04:11 GMT, Sep 24, 2017 |
0 Comments
1622
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றமான நிலைமை அதிகரித்துக் காணப்படும் நிலையில், வடகொரியாவின் கிழக்கு கரையோரப் பகுதியில் அமெரிக்காவின் போர் விமானங்கள் நேற்று (சனிக்கிழமை) பறந்துள்ளன.

வடகொரியாவின் அச்சுறுத்தல்களை முறியடிக்கும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார் என்பதை வெளிக்காட்டும் வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது.

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டமானது, உலகளாவிய ரீதியில் பாரிய அச்சுறுத்தலுக்குரியதாகும். எனவே, இந்த அச்சுறுத்தல் நடவடிக்கைகளிலிருந்து அமெரிக்காவையும் அதன் நேச நாடுகளையும் பாதுகாப்பதற்காக, தமது இராணுவத் திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தாம் தயாராகவுள்ளதாகவும் பென்டகன் கூறியுள்ளது.

ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளில் வடகொரியா ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பம் மீது பதற்றமான சூழ்நிலை அதிகரித்துள்ளது.

செப்டெம்பர் 3ஆம் திகதி அணுவாயுதப் பரிசோதனையை வடகொரியா நடத்தியதைத் தொடர்ந்து, வடகொரியா மீது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதன் பின்னரும், ஏவுகணைப் பரிசோதனையை வடகொரியா நடத்தியிருந்தது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் உரையாற்றியிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அமெரிக்காவையும் நேச நாடுகளையும் பாதுகாக்க வேண்டியதொரு நிலைமை ஏற்படும் பட்சத்தில் வடகொரியாவை முற்றாக அழிப்பேன் எனவும் சூளுரைத்திருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg