Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

யாழ்ப்பாணத்தில் மூன்று கடைகள் தீக்கிரை!

In இலங்கை
Published: 04:40 GMT, Sep 24, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
fire

யாழ்.சுன்னாகம் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், மூன்று கடைகளுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.

யாழ்.சுன்னாகம் சந்திப் பகுதியில் உள்ள இலத்திரனியல் கடையில் நேற்று (சனிக்கிழமை) இரவு இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இத் தீ அருகிலிருந்த புடைவைக் கடை மற்றும் நகைக் கடைக்கும் பரவியதில், குறித்த கடைகளில் உள்ள பொருட்கள் முற்றாக எரிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டதில், இத் தீ ஏனைய கடைகளுக்கும் பரவாமல் தடுக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் கடையின் மின்னொழுக்கில் ஏற்பட்ட கோளாறே இவ் விபத்திற்கு காரணமென தெரிவிக்கப்படும் நிலையில், சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg