Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

12 மாத கால சரிவில் இருந்து மீண்டெழுவதற்கு முயல்கிறோம்: வோர்னர்

In கிாிக்கட்
Published: 05:24 GMT, Sep 24, 2017 |
0 Comments
1159
icon_com
This post was written by : Anojkiyan

கடந்த 12 மாத காலமாக துடுப்பாட்டத்தில் ஏற்பட்டுள்ள சரிவை சரிசெய்ய முயற்சிசெய்து வருவதாக அவுஸ்ரேலிய அணியின் துணைத் தலைவர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

இந்தூரில் நடைபெறும் இந்திய அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை முன்னிட்டு நேற்று (சனிக்கிழமை) நடத்தப்பட்ட வலைப்பயிற்சிகளின் இடையே செய்தியாளர்களை சந்தித்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் கூறுகையில், “எங்களுடைய கடந்த 12 மாத கால பெறுபேறுகளைப் பார்க்கும் போது, ஒரு நாள் மற்றும் ரி-ருவென்ரி போட்டிகளில், துடுப்பாட்டத்தில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரிசெய்ய பாடுபடுகின்றோம். போட்டியின் நிலைமையைப் பொறுத்தே முடிவு அமையும்.

எதிர்வரும் உலகக் கிண்ணத்தை இலக்காகக் கொண்டு நாங்கள் பயணிக்கின்றோம். எனவே, நிலையான அணி ஒன்றை நாங்கள் உருவாக்க வேண்டும். அதற்கான வேலைகளை தற்போது முன்னெடுக்கப்படுகின்றன” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg