Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்காவுடன் அதிகார சமநிலையை பேணுவதே எமது இலக்கு – வடகொரியா

In உலகம்
Updated: 09:21 GMT, Sep 24, 2017 | Published: 05:14 GMT, Sep 24, 2017 |
0 Comments
1219
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்காவுடன் அதிகார சமநிலையைப் பேணுவதே வடகொரியாவின் இறுதி இலக்கு என, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி யோங் ஹோ (Ri Yong Ho) தெரிவித்துள்ளார்.

மேலும், வடகொரியா மீதான இராணுவ நடவடிக்கை அல்லது, வடகொரியாவின் தலைமையகம் அழிக்கப்படும் என்பது தொடர்பான சமிக்ஞையை அமெரிக்கா வெளிக்காட்டியிருந்தாலும் கூட, வடகொரியா தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ள தயாராகவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வடகொரியாவின் கிழக்கு கரையோரத்தில் அமெரிக்காவின் போர் விமானங்கள் நேற்று (சனிக்கிழமை) பறந்துள்ளன. இதனை அடுத்து, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ‘அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் இடையில் பதற்றமான சூழ்நிலை அதிகரித்துவரும் நிலையில், அமெரிக்க நிலப்பரப்பின் மீதான ரொக்கட் தாக்குதல் நடவடிக்கை தவிர்க்க முடியாதாகிப் போய்விடும்’ எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

ஏவுகணை மற்றும் அணுவாயுதப் பரிசோதனைகளை வடகொரியா நடத்தியுள்ளது. இந்நிலையில், செப்டெம்பர் 3ஆம் திகதி வடகொரியா அணுவாயுதப் பரிசோதனை நடத்தியதைத் தொடர்ந்து, மற்றுமொரு ஏவுகணைப் பரிசோதனையிலும் ஈடுபட்டிருந்தது.

வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனையை தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையால் இந்த மாதம் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், மற்றுமொரு பொருளாதாரத் தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த வியாழக்கிழமை அழைப்பு விடுத்துள்ளார்.

வடகொரியாவுடன் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மற்றும் நிதி உதவி வழங்கும் நிறுவனங்களை இலக்கு வைத்து மற்றுமொரு புதிய பொருளாதாரத் தடைக்கு அமெரிக்க ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg