Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சகவாழ்வை ஏற்படுத்த சகோதர மொழிகள் அவசியம்

In இலங்கை
Published: 05:45 GMT, Sep 24, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
Geerthika Jayawardena

முரண்பாடுகளைத் தவிர்த்து உண்மையான புரிந்துணர்வையும், உதவும் மனப்பான்மையையும், சகவாழ்வையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் சக்தி மிக்க கருவியாக சகோதர மொழியறிவு காணப்படுகின்றதென ரணவிரு சேவாவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலர் ரீ.எச்.கீர்த்திகா ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் பிரஜைகள் சபையினால் 80 பேருக்கு இலவசமாக சிங்கள மொழிக் கல்வியை போதிக்கும் வேலைத்திட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்-

”நான் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிங்கள சமூகத்தைச் சேர்ந்த ஒரேயொரு அலுவலராகப் பணிபுரிகின்ற போதும் எனக்கு எந்தவிதமான சங்கடமோ அச்ச உணர்வோ இருப்பதில்லை. மாவட்ட செயலகத்தில் பணியாற்றும் தமிழ் மொழி பேசும் சக அலுவலர்கள், பூரண ஒத்துழைப்பையும் சகோதரத்துவத்தையும் வெளிப்படுத்துவதால் என்னால் சிறப்பாக சேவையாற்ற முடிகின்றது.

தேவையுடைவர்களை நாடிச் சென்று சேவை புரிகின்ற போது இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகள் எதற்கு? அவையெல்லாம் தேவையில்லாத மனப்பாங்குகள்.

அரச உத்தியோகமாக இருந்தாலும், சாதாரணமாக ஒரு சுற்றுப் பயணம் செய்வதாக இருந்தாலும், பஸ்ஸில் பயணிப்பதாக இருந்தாலும் சகோதர மொழியைத் தெரிந்து வைத்திருப்பது அவசியம்.

அந்த வகையில், மட்டக்களப்பில் தமிழ் பேசும் சமூகத்தவர்கள் சிங்கள மொழி கற்றுக் கொள்ளும் ஆர்வத்தைக் கொண்டிருப்பதையிட்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகின்றேன்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg