Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வட்டுக்கோட்டை வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை திறந்துவைத்தார் ராஜித

In இலங்கை
Updated: 11:03 GMT, Sep 24, 2017 | Published: 06:19 GMT, Sep 24, 2017 |
0 Comments
1167
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு கட்டடத்தை, சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன திறந்துவைத்துள்ளார்.

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி கலாநிதி காந்தநேசன் ரதினி தலைமையில், இந்நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றது.

அத்துடன் யாழ். தீவக மக்களின் சுகாதாரசேவையை மேம்படுத்துவதை இலக்காக கொண்டு 68 மில்லியன் ரூபாய் நிதியுதவியில்,  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட வெளிநோயாளர் பிரிவு மற்றும் நிர்வாக அலகுக்கான இரண்டு மாடி கட்டடத்தொகுதியையும் சுகாதார அமைச்சர் திறந்துவைத்தார்.

இந்நிகழ்வில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டதோடு, மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், ராணுவ உயரதிகாரிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இவ் வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவு இல்லாத காரணத்தால் மக்கள் பல்வேறு  சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். சுகாதார அமைச்சின் கவனத்திற்கும் இவ்விடயம் கொண்டுசெல்லப்பட்டது. இந்நிலையில், GFATM எனும் திட்ட உதவியின் கீழ் இந்த வெளிநோயாளர் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

rajitha (4) rajitha (6) rajitha (5) rajitha (2) rajitha (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg