Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீடிப்பு

In இந்தியா
Published: 06:09 GMT, Sep 24, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Varothayan
perarivalan

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி பரோலில் விடுவிக்கப்பட்டுள்ள பேரறிவாளனின் பரோலை, மேலும் ஒரு மாதம் நீடிப்புச் செய்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த மாதம் 24 ஆம் திகதி பரோலில் வெளிவந்த பேரறிவாளனின், பரோல் காலம் இன்றுடன் முடிவடையும் நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மேலும் ஒருமாதம் பரோலை நீடிக்குமாறு பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பரோல் நீடிக்கப்படுமா? இல்லையா? என்ற விமர்சனங்கள் பரவலாக ஊடகங்களில் நேற்றைய தினம் வெளிவந்துள்ள நிலையில், பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாதம் நீடித்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பேரறிவாளனின் பரோலை நீடிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்டோர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தந்தையை காண, பேரறிவாளன் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார். பேரறிவாளனின் விண்ணப்பத்தை ஏற்று கடந்த மாதம் 24ஆம் திகதி, ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg