Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தடைகளை தகர்த்து தென்னாபிரிக்கா விரைந்தார் ருபெல் ஹொசைன்!

In கிாிக்கட்
Published: 06:32 GMT, Sep 24, 2017 |
0 Comments
1181
icon_com
This post was written by : Anojkiyan
rub

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ருபெல் ஹொசைன் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தகர்க்கப்பட்டதை தொடர்ந்து அவர் தென்னாபிரிக்கா சென்றுள்ளார்.

அங்கு சென்றுள்ள அவர், தென்னாபிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன் தென்னாபிரிக்க சென்ற ருபெல் ஹொசைனை, குற்றப் பிண்ணனி உள்ளதாக கூறி, அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதனையடுத்து பங்களாதேஷ் கிரிக்கெட் சபை, இது குறித்து உரிய விளக்கம் அளித்ததால் அவருக்கு தென்னாபிரிக்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

இரண்டு போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 28ஆம் திகதி பொட்டெஸ்ட்ரூம் மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg