Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நயன்தாராவின் அடுத்த படம் ஜோதிகாவிற்கு போட்டியானதா?

In சினிமா
Updated: 06:58 GMT, Sep 24, 2017 | Published: 06:58 GMT, Sep 24, 2017 |
0 Comments
1294
This post was written by : Kemasiya

குற்றம் 23 திரைப்படத்திற்கு அடுத்தபடியாக அறிவழகன் இயக்கும் திரைப்படம் பெண்களை மட்டும் மையப்படத்திய கதையாகவள்ளது. இப்படத்தில் நயந்தாரா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

சைக்கோலஜி த்ரிலர் கதையை கொண்ட இப்படத்தில் நடிப்பதற்கு இயக்குநர் ஜோதிகா, அனுஷ்கா மற்றும் மஞ்சுவாரி ஆகியோரிடம் கதையை கூறியள்ளார். ஆனால் ஜோதிகா, அனுஷ்கா மறுத்துவிட மஞ்சுவாரி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆயினும் மஞ்சுவாரி பெரிய அளவில் இக் கதைக்கு பொருத்தமாக தென்படாமையினால், இயக்குனர் நயன்தாராவை நாடி கதையை கூறியுள்ளார். நயனுக்கும் கதை பிடித்துப் போக சம்பளம் பேசியுள்ளார். தயாரிப்பாளரும் அவர் கேட்ட சம்பளத்திற்கு ஒப்புக் கொண்டதனால் இப் படத்தில் நயன் ஒப்பந்தமாகியுள்ளார்.

இது இவ்வாறிருக்க ஏற்கனவே மாயா, டோரா என தனித்து நின்று ஒரு காதாநாயகனுக்கு சரிசமமாக படங்களை கொடுத்த நயனுக்கு இந்தப் படம் ஒன்றும் பெரிதல்ல என இரசிகர்கள் வட்டம் இணையத்தளங்கள்  ஊடாக பேசி வருகின்றனர்.

எனினும் கடந்த 18ஆம் தினதி ஜோதிகாவின் மகளீர் மட்டும் திரைப்படம் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருக்கின்றது. இப் படம் பெண்களால் பேசப்படம் ஒரு படமாக இருக்கின்ற நிலையில், அடுத்து  பெண்களை மையப்படுத்திய கதையில் நயன் நடிக்கவுள்ளமை ஜோவிற்கு போட்டியாக இருக்குமோ என்றும் பேசப்படுகின்றது.

எவ்வாறாயினும் மாயா அளவிற்கு டோரா இரசிகர்களை ஈர்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg