Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தவான் அணிக்கு திரும்பும்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது: ரஹானே

In கிாிக்கட்
Published: 07:28 GMT, Sep 24, 2017 |
0 Comments
1641
icon_com
This post was written by : Anojkiyan
dha

இந்தியக் கிரிக்கெட் அணியில் அஜின்கியா ரஹானே தொடர்ந்து நீடிப்பது சந்தேகத்திற்கிடமாகியுள்ள நிலையில், தவான் அணிக்கு திரும்பும்போது அணியில் என்ன மாற்றம் நிகழும் என்பது யாருக்கும் தெரியாது என ரஹானே கூறியுள்ளார்.

இந்திய அணியில் ஆரம்ப துடுபாட்ட வீரராக களமிறங்குவதில் ரஹானேவிற்கும் தவானுக்கும் கடும் போட்டி நிலவுகின்றது.

தனது மனைவிக்கு சத்திர சிகிச்சை என்பதனால், அவுஸ்ரேலிய அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் இருந்து தவான் விலகியுன்னார். இதனால் ரோஹித் சர்மாவுடன் ரஹானே ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கி வருகிறார்.

தவான் மீண்டும் அணிக்கு திரும்பும் பட்சத்தில் ரஹானே அணியில் இடம்பெறுவது கடிமாகிவிடும். இந்நிலையில் தனது எதிர்காலம் குறித்து ரஹானே கூறுகையில்,

”எதிர்காலம் குறித்து நான் நினைக்கவில்லை. எனக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது என் சிறந்த துடுப்பாட்டததை வெளிப்படுத்துவேன். இதுதான் விடயம். நான் ஏற்கனவே இந்த விடயத்தில் இந்த சிந்தனையோடுதான் இருக்கிறேன்.

தவான் அணிக்கு திரும்பும்போது என்ன நிகழும் என்பது யாருக்கும் தெரியாது. என்னை பொறுத்தவரையில் என்னுடைய முழுத்திறமையையும் அணிக்காக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் முக்கியமான விடயம். அதனால் என்னுடைய துடுப்பாட்ட திட்டத்தில் உறுதியாக இருந்து, வாய்ப்பு கிடைக்கும்போது, சிறப்பாக வெளிப்படுத்த முயற்சி செய்வேன். எந்தநேரமும் அணிக்காக சதம் அடிப்பது குறித்து நீங்கள் நினைக்க முடியாது. முக்கியமான கட்டத்தில் 45 முதல் 50 அல்லது 70 ஓட்டங்கள் அடித்தால், அதுவே பெரிய விடயம். நான் எப்போதும் இதைத்தான் விரும்புவேன்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg