Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனேடிய பிரதமரை சந்தித்தார் இளவரசர் ஹரி

In
Updated: 06:45 GMT, Sep 24, 2017 | Published: 06:45 GMT, Sep 24, 2017 |
0 Comments
1193
This post was written by : Suganthini

ரொறன்டோவில் நடைபெறும் பராஒலிம்பிக் பாணியிலான சர்வதேச விளையாட்டு நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற பிரித்தானிய இளவரசர் ஹரி, கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

பராஒலிம்பிக் பாணியிலான சர்வதேச விளையாட்டு நிகழ்வு நேற்று (சனிக்கிழமை) மாலை ஆரம்பமாகியது. இதன் பின்னர், கனேடியப் பிரதமருக்கும் இளவரசர் ஹரிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் இவர்கள் இருவரும் கலந்துரையாடியுள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதிவரை நடைபெறும் இந்நிகழ்வில் 12 வகையான விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன என்பதுடன், யுத்த நடவடிக்கைகளின்போது அங்கவீனமான சுமார் 550க்கும் அதிகளவான படையினர் இதில் கலந்துகொள்கின்றனர்.

யுத்த நடவடிக்கைகளின்போது அங்கவீனமான படையினரைக் கருத்திற்கொண்டு பல்வேறு வகையான விளையாட்டுகளை உள்ளடக்கிய பராஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வை கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் இளவரசர் ஹரி ஆரம்பித்திருந்தார்.

மேலும், ரொறன்டோவுக்கு நேற்றுமுன்தினம் புறப்பட்டுச் சென்ற இளவரசர் ஹரி, இந்த நிகழ்வில் கலந்துகொள்ளும் விளையாட்டு வீரர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அறக்கட்டளை நிலையமொன்றில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg