Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வாழைச்சேனை கடதாசி ஆலை விரைவில் இயங்கும்: சம்பந்தன்

In இலங்கை
Updated: 08:39 GMT, Sep 24, 2017 | Published: 06:50 GMT, Sep 24, 2017 |
0 Comments
1070
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளவும் இயங்கச் செய்வதற்கான சகல நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ளவுள்ளதாக, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் விரைவில் சந்தித்து பேச உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு – வாழைச்சேனைப் பிரதேசத்திற்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஜயம் செய்த சம்பந்தன், மட்டக்களப்பு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டார். அதன் பின்னர் பொதுமக்களுக்கு மத்தியில் உரையாற்றிய போதே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

குறிப்பாக, கடதாசி ஆலையை மீள இயங்கச் செய்வதற்கு தடையாக, எந்தவொரு வெளிப்படைக்காரணமும் தற்போது காணப்படாத நிலையில், அரசாங்கம் அதனை மீள ஆரம்பித்து, பிரதேசத்தில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்தார்.

இவ் விஜயத்தின் போது, வாழைச்சேனை கடதாசி ஆலைக்கும் சென்று எதிர்க்கட்சித் தலைவர் பார்வையிட்டார். இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், ஸ்ரீநேசன் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராஜசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg