Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற்: போதியளவான திட்டங்கள் இல்லையென குற்றச்சாட்டு

In
Published: 07:42 GMT, Sep 24, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Suganthini
uk

சிறந்ததொரு பிரெக்சிற் ஒப்பந்தத்தை பெற்றுக்கொள்வதற்காக போதியளவான அடிப்படைத் திட்டங்களை பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயும் அவரது அமைச்சரவையும் முன்வைக்கவில்லை என்று வேல்ஸ் முதலமைச்சர் கார்வியன் ஜோன்ஸ் (Carwyn Jones)   தெரிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரைட்டன் நகரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் தொழில் கட்சி மாநாட்டில் வேல்ஸ் முதலமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். அவர் தனது உரையின்போது, மேற்கண்டவாறு தெரிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துகளை பிரித்தானியப் பிரதமர் அறிய வேண்டிய தேவையில்லை என்றும் அவர் கூறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தைகளை குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று பிரித்தானிய அரசாங்கம் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகவுள்ள நிலையில், இரண்டு வருடகாலத்துக்கு வர்த்தக உறவை நீடிக்குமாறு இத்தாலியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரித்தானியப் பிரதமர், ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

Banner
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg