Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

2011ஆம் உலகக்கிண்ண தொடரில் சூதாட்டம்: ஊழல் தடுப்பு குழு இலங்கை மீது விசாரணை

In கிாிக்கட்
Published: 07:44 GMT, Sep 24, 2017 |
0 Comments
3171
icon_com
This post was written by : Anojkiyan
sood

2011ஆம் ஆண்டு நடைபெற்ற 50ஓவர் உலகக்கிண்ண தொடரில் சூதாட்டம் இடம்பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு குழு இலங்கை மீது விசாரணையை ஆரம்பித்துள்ளது.

இதனை சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு குழுவின் பொதுமேலாளர் அலெக்ஸ் மார்ஷல் உறுதி செய்துள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணி சமீப காலமாக தொடர்ச்சியான தோல்விகளை சந்தித்துவரும் நிலையில், இலங்கை அணியின் முன்னாள் அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் சூதாட்டம் இடம்பெற்றதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்தார்.

இந்நிலையில், இந்த புகாரை விசாரிக்க சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு குழு முன்வந்துள்ளது.

இந்தியாவின் மும்பை மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், இலங்கை அணியை இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகொண்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg