Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஏட்டிக்கு போட்டியாக போராட்டம்: புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டு!

In இலங்கை
Updated: 11:50 GMT, Sep 24, 2017 | Published: 08:36 GMT, Sep 24, 2017 |
0 Comments
1348
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam
united-nations-geneva-human-rights-council1-626x3801

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து, ஜெனீவாவில் சிங்கள அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளன.

ஜெனீவாவில் அமைந்துள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் முன்றலில், ஜெனீவா நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நண்பகல் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள், இலங்கையிலிருந்து சென்ற சில நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், முன்னாள் கடற்படை அதிகாரி ரியல் அட்மிரல் சரத் வீரசேகரவும் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கைக்கு எதிராக பாரிய போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கெதிராகவே இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, ஐ.நா. ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டுமென ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் ஏற்கனவே சரத் வீரசேகர முறைப்பாடு செய்திருந்தார். இந்நிலையில், இன்றைய ஆர்ப்பாட்டத்தில், ஐ.நா. ஆணையாளருக்கு எதிராக சரத் வீரசேகர உள்ளிட்டோர் குரல்கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இலங்கை மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தெரிவித்து, கடந்த வாரம் புலம்பெயர் தமிழர்கள், தமிழ் அமைப்புக்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களால் கடந்த வாரம் ஐ.நா. முன்றலில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg