Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நுவரெலியா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் விஜயம்!

In இலங்கை
Published: 08:45 GMT, Sep 24, 2017 |
0 Comments
1182
This post was written by : Ravivarman
IMG_8758

அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நுவரெலியா வைத்தியசாலையின் வேலைத்திட்டங்களைப் பார்வையிடுவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேரடி விஜயம் ஒன்றினை நேற்றையதினம் (சனிக்கிழமை) மேற்கொண்டார்.

கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனின் வேண்டுகோளுக்கு அமைய நெதர்லாந்து நாட்டின் உதவியுடன் 37 மில்லியன் யூரோ செலவில் மேற்படி வைத்தியசாலை அபிவிருத்தி செய்யபட்டு வருகின்றது.

இவ்விஜயத்தில் வைத்திய உயர் அதிகாரிகள், மத்திய மாகாண விவசாய தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம் உட்பட வைத்தியர்களும் கலந்துக் கொண்டனர்.

இதன்போது மேற்படி வைத்தியசாலையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கூடிய விரைவில் மக்கள் பாவனைக்கு கையளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

03 IMG_8875 IMG_8761 IMG_8753

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg