Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மியன்மாரில் மீண்டும் கலவரம்: 20 வீடுகள் தீக்கிரை

In உலகம்
Updated: 11:05 GMT, Sep 24, 2017 | Published: 11:05 GMT, Sep 24, 2017 |
0 Comments
1248
This post was written by : Suganthini

மியான்மாரின் ராஹினி மாநிலத்தில் 20 வீடுகள் இனந்தெரியாதோரால் நேற்று (சனிக்கிழமை) இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

ராஹினி மாநிலத்திலுள்ள மயுங்கா இயான் சங் எனும் கிராமத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தக் கிராமத்தினுள் நுழைந்த கும்பலொன்று வீடுகளுக்கு தீ வைத்துள்ளது.

இந்நிலையில், வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலிருந்து இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவம் காரணமாக ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பங்களாதேஷில் ரோஹிங்கியா அகதிகள் பலர் தஞ்சம் கோரி வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg