Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எமது சமூகத்திற்குள் ஒற்றுமை இல்லை: செல்வம் அடைக்கலநாதன்

In இலங்கை
Published: 11:18 GMT, Sep 24, 2017 |
0 Comments
1245
This post was written by : Ravivarman

எமது சமூகத்திற்குள் ஒற்றுமை இல்லை என வன்னி நாடாளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அக்கினிச்சிறகுகள் அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சகோதர இனமான முஸ்லிம் சமூகத்திற்குள் உள்ள ஒற்றுமை போன்று எங்கள் சமூகத்திற்குள் வரவில்லை என்பது வெட்கப்படும் விடயமாக காணப்படுகின்றது.

நாடாளுமன்றத்தில் அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பாக மூன்று நாட்களிற்கு விவாதம் நடைபெறவுள்ளது. இவ்விவாத்திலே எங்களது தரப்பிலே என்ன நியாயத்தை பெறவேண்டும் என்பதுதான் பிரதானமாகும்.

ஆலோசனையின் அடிப்படையிலே தீர்மானத்திற்கு வரமுடியாது. இப்பொழுது இருக்கின்ற ஆலோசனை கொடுப்பவர்கள் எந்தளவிற்கு இனம், கொள்கை சார்ந்து செயற்பட ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

இந்த விடயங்கள் எங்களுடைய கொள்கைக்கு மாற்றாக இருக்குமாயின் இந்த மூன்று நாள் விவாதத்திலே சரியான விவாதத்தை செயற்படுத்தி எங்களது கொள்கையை நிலைநாட்டுவதோடு அதை கொண்டுவருவதற்காக முயற்சிக்க வேண்டும்” என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg