Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘மன் கி பாத்’ மூலம் மக்கள் பிரச்சனைகளை அறிந்து கொள்ள முடிகிறது: மோடி

In இந்தியா
Published: 12:16 GMT, Sep 24, 2017 |
0 Comments
1116
icon_com
This post was written by : Varothayan
Mann-Ki-Baat-helps

மக்களின் பிரச்சனைகளைப் பற்றி அரசாங்கம் அறிந்து கொள்ள ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உதவுவதாகவும், இதன் மூலம் ஒட்டு மொத்த நாட்டு மக்களுடனும் தொடர்பு கொள்ள முடிவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் ஒளிபரப்பாகும் இந்நிகழ்ச்சியில், 36 ஆவது தடவையாக உரையாற்றும் போதே மோடி இன்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த வானொலி நிகழ்ச்சி எனது கருத்து மற்றும் கண்ணோட்டத்தில் மட்டும் அமைந்தது அல்ல, நாட்டை வடிவமைப்பதில் மக்களின் கருத்துகளையும் கண்ணோட்டத்தையும் தெரிவிப்பதற்கு இந்நிகழ்ச்சி உதவியுள்ளது. அரசியல் கலவை இல்லாமல் இந்நிகழ்ச்சியை கொண்டுசெல்ல நான் முயன்று வந்துள்ளேன் எனவும் மோடி மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg