Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அரசியல் மறுசீரமைப்பு குறித்து தெரியாதவர்களாக இருக்க முடியாது: மனோகரன்

In இலங்கை
Updated: 11:44 GMT, Sep 24, 2017 | Published: 11:43 GMT, Sep 24, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Ravivarman
a (3)

நமது நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டிருக்கும் புதிய அரசியல் மறுசீரமைப்பு குறித்து எதுவும் தெரியாதவர்களாக நாம் இருந்து விட முடியாது என தேசிய சமாதானப் பேரவையின் மாவட்ட சர்வமதப் பேரவைக்கான மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் இராசையா மனோகரன் தெரிவித்தார்.

மாவட்ட சர்வ மதப் பேரவையின் உறுப்பினர்களுக்கான ‘அரசியல் மறுசீரமைப்பு’ எனும் தொனிப்பொருளிலமைந்த செயலமர்வு கல்லடி கிறீன் கார்டன் விடுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நமது நாட்டின் 30 வருட கால முரண்பாட்டுச் சூழலில் ‘வென்றவன் தோற்றான் தோற்றவன் அழிந்தான்’ என்ற போக்கை நாம் மாற்றியாக வேண்டும்.

சர்வமத உறுப்பினர்கள் சமூகத்தோடு இருப்பவர்கள். ஆதலால் சமூகத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இடம்பெறும் பிரச்சினைகளுக்கு முகங் கொடுத்துக் கொண்டிருப்பவர்கள்.

ஆகையினால் சர்வமத உறுப்பினர்களுக்கு சமகால அரசியல் அறிவு இன்றியமையாததாக இருக்கின்றது. சமகாலப் பிரச்சினைகளில், அரசியல் முன்னெடுப்புக்களில் நமக்குள்ள அக்கறை எதிர்கால சந்ததிகளை வழிநடத்தவும் முரண்பாடில்லாத உடன்பாடு கண்ட சமூகமாக ஐக்கியப்பட்டு வாழவும் வழியேற்படுத்திக் கொடுக்கும்.

எதிர்காலத்தில் குழப்பமில்லாத சமுதாயத்தைத் தோற்றுவிப்பது சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூக அக்கறையுள்ள ஒவ்வொருவர் மீதும் உள்ள கடமையாகும்.

மனித உரிமைகளை உறுதிப்படுத்துவதையும், சட்டவாட்சியை முன்னேற்றுவதையும், அதனைப் பாதுகாப்பதையும் நாட்டுப் பிரஜைகள் அனைவரும் தங்களது முழுமுதற் கடமையாகக் கொள்ள வேண்டும்” என இராசையா மனோகரன் மேலும் தெரிவித்தார்.

a (5) a (4) a (2) a (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg