Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

புதிய அரசியல் யாப்பு குறித்து ராஜித வெளியிட்டுள்ள தகவல்

In இலங்கை
Published: 12:30 GMT, Sep 24, 2017 |
0 Comments
1285
icon_com
This post was written by : Kalavarshny Kanagaratnam

சகல கட்சிகளின் அனுமதியை பெற்றே புதிய அரசியல் யாப்பு உருவாக்கப்படுமென, இலங்கையின் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

யாழ். ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை திறந்து வைத்த அமைச்சர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே இவ்வாறு கூறியுள்ளார். அமைச்சர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”அரசியல் யாப்பு தொடர்பான வரைபு, தற்போது நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சகல கட்சிகளினதும் நிலைப்பாட்டை அறிந்து அதனை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளோம்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை தொடர்பில் மாத்திரமே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அரசியலமைப்பின் ஏனைய விடயங்களுக்கு சுதந்திரக் கட்சி ஆதரவையே வெளியிட்டுள்ளது. எனினும் முதற் தடவையாக இரண்டு பிரதான கட்சிகளும் ஒரு இணக்கத்திற்கு வந்துள்ளமை விசேட அம்சமாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg