Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

போதைப்பொருள் பாவனையை ஒழித்து நல்லதொரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்: சுபைர்

In இலங்கை
Published: 14:36 GMT, Sep 24, 2017 |
0 Comments
1187
icon_com
This post was written by : Ravivarman
21686388_806278609532523_396176938561683414_n

ஏறாவூர் பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கும், விசேடமாக பாடசாலை மாணவர்களை இதிலிருந்து பாதுகாத்து நல்லதொரு கல்விச் சமூகத்தை கட்டியெழுப்புவதற்கும் அனைத்து தரப்பினரினதும் உதவியை எதிர்பார்ப்பதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஏறாவூர் பிரதேச ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான எம்.எஸ்.சுபைர் தெரிவித்தார்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை சம்பந்தமான கலந்துரையாடல் அண்மையில் ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஏறாவூர் பிரதேசத்தில் அதிகரித்து வருகின்ற போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்கு, பொது நிறுவனங்கள் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் ஒத்துழைப்புக்களும் மிக அவசியமாகவுள்ளது. இந்த விடயமாக பொலிஸாருக்கு பொது மக்கள் தகவல்களை வழங்குவதற்கு அச்சப்படுகின்றனர்.

சில பொலிஸ் அதிகாரிகளின் சிறந்த நடவடிக்கைககளின் மூலம் இப்பிராந்தியத்தில் கடந்த காலங்களில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்துக்கு முன் நிறுத்தப்பட்டனர்.

இருந்தாலும் அண்மைக்காலமாக இந்த போதைப்பொருள் பாவனை மட்டக்களப்பு மாவட்டத்திலே அதிகாரித்து வருகிறது. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை இதற்கு அடிமையாகியுள்ளனர்.

எனவே எதிர்வரும் காலங்களில் இந்த போதைப்பொருள் பாவனையை எமது பிரதேசத்திலிருந்து முற்றாக ஒழிப்பதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

21762100_806278639532520_906299538400790239_n 21752030_806278729532511_8387153835631245135_n

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg