Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வைத்தியசாலைகளின் தரமுயர்வு தொடர்பில் பதிலளிக்குமாறு கோரிக்கை!

In இலங்கை
Updated: 14:53 GMT, Sep 24, 2017 | Published: 14:53 GMT, Sep 24, 2017 |
0 Comments
1236
This post was written by : Ravivarman

வைத்தியசாலைகளின் தரமுயர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ்.உதுமாலெப்பை கிழக்கு மாகாண சபையில் பல கேள்விகளை முன்வைக்கவுள்ளார்.

கிழக்கு மாகாண சபையின் 85வது சபை அமர்வு நாளை (திங்கட்கிழமை) திங்கட்கிழமை நடைபெறவுள்ளது.

இதன்போதே எதிர்க்கட்சித் தலைவர் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் பதிலை எதிர்பார்த்து வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் கேள்வியெழுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,”மத்திய அரசாங்க சுகாதார அமைச்சில் நடைபெற்ற அக்கூட்டத்தில் தரமுயர்த்துவதற்காக சமர்ப்பிக்கப்பட்ட கிழக்கு மாகாண வைத்தியசாலைகளில் எந்தெந்த வைத்தியசாலைகள் தரமுயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன எனும் விபரங்களை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் சபையில் தெரிவிக்க வேண்டும்.

சம்மாந்துறை தள வைத்தியசாலையைத் தரமுயர்த்துதல், கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிற்கு விடுவித்து அபிவிருத்திகளை மேற்கொள்ளுதல் போன்ற விடயங்களைத் தெளிவுபடுத்த வேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg