Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இனவாதத்தினை விரும்பாதவர்களாக இருக்கவேண்டும்: வியாழேந்திரன்

In இலங்கை
Updated: 16:30 GMT, Sep 24, 2017 | Published: 15:30 GMT, Sep 24, 2017 |
0 Comments
1202
icon_com
This post was written by : Ravivarman
13692616_663019150522350_4532240538265913215_n

நாட்டில் எதிர்காலத் தலைவர்கள் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் விரும்பாத தலைவர்களாக உருவாக்கப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு நாவற்குடா புனித மரியாள் அங்கிலிக்கன் தேவாலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா,சுற்றுமதில் மற்றும் முன்பள்ளி ஆகியவற்றின் திறப்பு விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மூவினங்களிலும் இனவாதத்தினையும் மதவாதத்தினையும் விரும்பாதவர்கள் உள்ளனர்.ஆனால் பெரும்பான்மை சமூகத்திற்கு தலைமைதாங்கிய தலைவர்களே தாங்கள் அரசியல் செய்வதற்காக மக்கள் மத்தியில் இனவாத்தினையும் மதவாதத்தினையும் மக்கள் மத்தியில் விதைத்து இந்த நாட்டினை ஆட்சி செய்துவந்துள்ளனர்.

அதன் காரணமாகவே இந்த நாட்டில் உள்ள சிறுபான்மை சமூகங்களில் ஒன்றான தமிழ் சமூகம் காலணித்துவ ஆட்சியின் பின்னர் பல்வேறு இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துவந்துள்ளது. அதனை நாங்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

நல்லாட்சி கொண்டுவருகின்ற அரசியல் யாப்பில் கூட சமஸ்டிக்கு இடமளிக்காத வகையில் பிளவுபடமுடியாத,பிரிக்கமுடியாத ஒற்றையாட்சி என்ற பதம் அங்கு பாவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி பௌத்த மதத்திற்குத்தான் முதன்மை இடமென்ற விடயமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தேர்தலை நடாத்தாமல் காலத்தினை இழுத்தடித்து மாகாணசபையின் அதிகாரத்தினை ஆளுனரிடம் வழங்கும் செயற்பாட்டினை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

ஆளுனர் என்பவர் மக்களினால் தெரிவுசெய்யப்படாத ஒருவர்.அரசாங்கத்தினால் நேரடியாக தெரிவுசெய்யப்படும் ஒருவர்.மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் ஆளுனர் மாகாணத்தினை நிர்வகிப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியாது.

எந்த மாகாணசபை என்றாலும் அதன் பதவிக்காலம் முடிந்தால் தேர்தல் உடனடியாக நடாத்தப்படவேண்டும்” என வியாழேந்திரன் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg