Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு முழுமையாக உதவும்: குட்டரஸ்

In இலங்கை
Published: 02:26 GMT, Sep 25, 2017 |
0 Comments
1136
icon_com
This post was written by : Anojkiyan

இலங்கையுடனான ஒத்துழைப்பு நிகழ்ச்சித்திட்டங்களை பலப்படுத்தி இலங்கை நாட்டுக்கும் மக்களுக்கும் முழுமையான உதவிகளை வழங்க தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 72வது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்டரஸிக்குமிடையேயான சந்திப்பின் போதே செயலாளர் நாயகம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இலங்கை தேசத்துடன் மிக நெருக்கமாக செயற்பட்டு அனைத்து இலங்கையர்களுக்கும் சுபீட்சம் மற்றும் சகவாழ்வு நிறைந்த, உலகின் முன்மாதிரி தேசமாக எழுந்திருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை முழுமையாக உதவும் என்றும் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

அபிவிருத்தி இலக்குகளை வெற்றிகொண்டு நல்லிணக்க கொள்கையுடன் பயணிக்கும் இலங்கையின் தற்போதைய முன்னேற்றங்களை நேரில் கண்டறிவதற்காக தனிப்பட்ட முறையில் இலங்கைக்கு விஜயம்செய்யுமாறு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்திற்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg