Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

மாணவிகள் மீது பொலிஸார் தாக்குதல்: எழுகின்றன கண்டன குரல்கள்!

In இந்தியா
Published: 03:45 GMT, Sep 25, 2017 |
0 Comments
1251
icon_com
This post was written by : Kemasiya

உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட  பனாரஸ் இந்து பல்கலைக்கழக (Banaras Hindu University) மாணவிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனா்.

குறித்த பல்கலைக்கழக மாணவிகள், வெளியில் இருப்பவர்கள் தொடர்ந்தும் தங்களை கேலி செய்வதாகவும், இது ஒரு பாலியல் தொல்லை எனவும், பெண்களை கேலி செய்யும் விடயத்தை தாம் மிகவும் கண்டிப்பதாகவும் கூறி  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தை தடுத்த பொலிஸார் மாணவிகளை தாக்கியதால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதங்கள் மற்றும் மோதல்கள் ஏற்ப்பட்டன. இதன்போது பொலிஸாரினால் மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்டாதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து, நேற்று  முழுவதும் குறித்த பகுதியில் பதற்றமான சுழல் நிலவி வந்துள்ளது. அத்துடன் மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் மாணவிகள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்கொண்ட பொலிஸாரின் செயலுக்கு எதிராக, ராகுல் காந்தி உட்பட பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg