Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பங்களாதேஷில் தொற்று நோயால் ரோஹிங்கியா அகதிகள் பாதிப்பு

In உலகம்
Published: 04:08 GMT, Sep 25, 2017 |
0 Comments
1145
icon_com
This post was written by : Suganthini

பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகள் போஷாக்குக் குறைபாடு உட்பட பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக இலவச மருத்துவ முகாமொன்று பங்களாதேஷில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது, சுமார் 600 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

மியன்மாரில் இருந்து வந்து பங்களாதேஷில் அகதிகளாக தங்கியுள்ள மக்கள் வயிற்றோட்டம் உட்பட பல்வேறு தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவா்களுக்கு தங்குமிட வசதி, சுத்தமான குடிநீர், உணவு மற்றும் சுகாதாரம் ஆகிய வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தொண்டுப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் தங்கியுள்ள முகாம்களை அண்டிய பகுதிகளில் நீர் தேங்கி நிற்பதால், வயிற்றோட்டம் போன்ற தொற்று நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவதாகவும் தொண்டுப் பணியாளர்கள் கூறியுள்ளனர்.

மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்றுவரும் வன்முறை காரணமாக, பங்களாதேஷில் இதுவரையில் சுமார் 4 இலட்சத்து 30 ஆயிரம் பேர் தஞ்சம் கோரியுள்ளனார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg