Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அவுஸ்ரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றியது

In கிாிக்கட்
Published: 05:06 GMT, Sep 25, 2017 |
0 Comments
1516
icon_com
This post was written by : Surenth
Aus VS Ind

அவுஸ்ரேலிய அணிக்கு எதிரான 3ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என இந்திய அணி முன்னிலை பெற்று, தொடரையும் கைப்பற்றியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி, முதலில் களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

அவுஸ்ரேலிய அணியின் துடுப்பாட்டத்தில், பிஞ்ச் 124 ஓட்டங்களையும் ஸ்மித் 63 ஓட்டங்களையும் வோனர் 42 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர். இந்திய அணியின் பந்து வீச்சில், பூம்ரா மற்றும் குல்திப் ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கெட்டுகளையும் சஹால் மற்றும் பாண்டியா ஆகியோர் தலா ஒவ்வோரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

294 என்ற வெற்றி இலக்குடன் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.5 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 294 ஓட்டங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில், பாண்டியா 78 ஓட்டங்களையும் ரோஹித் சர்மா 71 ஓட்டங்களையும், ரஹானே 70 ஓட்டங்களையும், பெற்றுக் கொடுத்தனர். அவுஸ்ரேலிய அணியின் பந்து வீச்சில், கம்மின்ஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கொல்ட்ர் நெயில், ரிட்சட்ஷன் மற்றும் அகர் ஆகியோர் தலா ஒவ்வோரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg