Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலை

In இந்தியா
Published: 05:25 GMT, Sep 25, 2017 |
0 Comments
1725
icon_com
This post was written by : Kemasiya
dead

மதுரையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் மதுரை நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை அண்ணாணகர் பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் பரிதாபமான நிலையில், அரச மருத்துவமைனையில்   சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஜெயஜோதி (வயது 65) என்பவரும் இவரது மகன்களான வேல்முருகன் (வ-52), குறிஞ்சிக்குமாரன் (வ 50) மற்றும் இவர்களுடைய மனைவிமாரான தேவி, தங்கச்செல்வி என்போரும் பிள்ளைகளான ஜெயசக்தி, தாரணி,ஜெயமோனிகா, ஆகியோரே விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

மேலும் தற்கொலை தொடர்பில் கிடைத்துள்ள தகவலின் படி,

இவர்கள் குறித்த பகதியில் கூட்டு குடும்பமாக வசித்து வந்துள்ளனர். ஜெயம் தனியார் பாலர் பாடசாலையொன்றினை நடத்தி வந்துள்ளார். அத்துடன் காப்பீட்டு நிறுவனமொன்றில் முகவராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று நீண்ட நேரமாக இவர்களுடைய வீடு புட்டி இருந்துள்ளது. சிறிது நேரம் செல்ல வீட்டிற்குள் இருந்து விஷ வாடை வருவதை கண்ட அயல் வீட்டு உறவினர்கள், வீட்டு கதவை திறக்க முயன்றுள்ளனர். வீடு திறக்க முடியாமல் போக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதையடுத்து விரைந்து வந்த பொலிஸார், வீட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். வீட்டிற்குள் விஷம் குடுத்து 6 பேர் சடலமாகவும் 2 பேர் உயிருக்கு போராடிக் கொண்டும் இருந்த நிலையில், அவர்களை மீட்டு அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

தற்போதைய பொலிஸ் விசாரணையின் படி, இவர்களின் மரணத்திற்கு காரணம் ஜெயம் நடத்திய பாடசாலை நட்டத்தில் சென்றமை மற்றும் இவர்கள் தீபாவளிக்காக பணம் வசூழித்திருந்தார்கள். ஆனால் வாங்கியவர்களுக்கு அதை திருப்பி கொடுக்க முடிவில்லை அதனால் தறந்கொலைக்கு முயன்றிருக்கலாம் சந்தேகங்களே எழுந்துள்ளன.

இந்த தற்கொலை குறித்து  பூரண தகவல் எதுவும் கிடைக்கப் பெறாதமையினால், பிரேத பரிசோதனை இடம்பெற்ற வருகின்றது. மேலும்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg