Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அணியின் வெற்றிக்காக எதையும் செய்வேன்: ஹர்திக் பாண்டியா

In கிாிக்கட்
Published: 06:03 GMT, Sep 25, 2017 |
0 Comments
3675
icon_com
This post was written by : Surenth
Cricket - Fourth One Day International Match - Sri Lanka v India

இந்திய அணியின் வெற்றிக்காக எப்படி வேண்டும் என்றாலும் எந்த சந்தர்ப்பத்தில் வேண்டும் என்றாலும் விளையாடுவேன் என இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

இந்தியா – அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்திய அணி வெற்றி பெற்றது. இதில் ஹர்திக் பாண்டியா, 78 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். இதனையடுத்து, ஆட்ட நாயகன் விருது பெற்ற அவர் வெற்றி குறித்து கருத்து தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அணியின் வெற்றிக்காக எந்த வரிசையில் வேண்டுமானாலும் தான் களமிறங்கி விளையாட தயாராக உள்ளதாகவும் தனக்கு அணியின் வெற்றியே முக்கியம் எனவும் கூறினார்.

அணி வெற்றி இலக்கை அடைவதை தான் ஒரு சவாலாக எடுத்து அதற்கு ஏற்ற வகையில் தான் விளையாட தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அணிக்கான தனது முழுமையான பங்களிப்பை வெளிப்படுத்தும் வாய்ப்பாகவே இது போன்ற வாய்ப்பை தான் கருதுவதாகவும் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg