Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடகொரியா உட்பட 3 நாடுகளுக்கு பயணத்தடை விதித்துள்ள அமெரிக்கா

In உலகம்
Published: 05:32 GMT, Sep 25, 2017 |
0 Comments
1134
icon_com
This post was written by : Suganthini
ban

வடகொரியா, வெனிசுவேலா மற்றும் சாட் ஆகிய நாட்டுப் பிரஜைகளுக்கு அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளது.

ஈரான், லிபியா, சிரியா, யேமன், சோமாலியா ஆகிய நாடுகளுக்கு ஏற்கெனவே பயணத்தடையை அமெரிக்கா விதித்துள்ளது. இந்தப் பட்டியலில் மேற்படி 3 நாடுகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று நாடுகளுக்குமான பயணத்தடை நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அமுலுக்கு வந்துள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘அமெரிக்காவின் பாதுகாப்பைக் கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதுடன், பாதுகாப்பான அமெரிக்காவை உருவாக்குவதே எனது முதல் கடமை’ எனவும் கூறியுள்ளார்.

வடகொரியாவானது எந்த வகையிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கவில்லை என்பதுடன், அமெரிக்காவின் தேவைகளையும் நிறைவேற்றவில்லை என்பதால், வடகொரியா பிரஜைகள் அமெரிக்காவுக்குள் நுழைவதற்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது என, வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

இதேவேளை, சாட் நாடானது பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான நடவடிக்கையில் முக்கிய பங்காளியாக இருந்த போதிலும், பயங்கரவாதம் உட்பட ஏனைய தொடர்பான தகவல்களை தம்முடன் பகிர்ந்துகொள்ளவில்லை எனவும் இதன் காரணமாக அந்நாட்டுப் பிரஜைகளுக்கு பயணத்தடையை விதித்துள்ளதாகவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.

மேலும், வெனிசுவேலா இந்தப் பட்டியலில் இடம்பெற்றாலும், அந்நாட்டு அரசாங்க அலுவலர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு மட்டும் இந்தப் தடை பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவுடன் தற்போது ஏற்பட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மோதலை கடைப்பிடித்து வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg