Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அமெரிக்க சிறைச்சாலையில் கலவரம்: ஒருவர் உயிரிழப்பு

In
Published: 06:00 GMT, Sep 25, 2017 |
0 Comments
1096
icon_com
This post was written by : Suganthini

அமெரிக்கா, கலிபோர்னியா மாநிலத்தில் அமைந்துள்ள மத்திய சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் ஏற்பட்ட கலவரத்தின்போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சிறைச்சாலையிலுள்ள சுமார் 160 கைதிகளுக்கு இடையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைகலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 9 பேர் வெட்டுக் காயங்களுக்கு உள்ளாகினர்.

இவர்களை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லும் வழியில் சிறைக்கைதியொருவர் உயிரிழந்துள்ளார் என, சிறைக் காவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவருக்கு 13 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறைத்தண்டனை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்தக் கலவரத்தை அடக்குவதற்காக சிறைக்காவலர்கள் மிளகுத்தூளை வீசியதுடன், இறப்பர் குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைக்காவலர்கள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg