Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் பட்டமளிப்பும் ‘தமிழ்நிதி’ விருது வழங்கல் நிகழ்வும்

In இலங்கை
Published: 06:08 GMT, Sep 25, 2017 |
0 Comments
1039
icon_com
This post was written by : Varothayan
Tamil Sangam

கொழும்புத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் 2016 – 2017க்கான தமிழ்ப்பட்டயக் கற்கைநெறி பட்டமளிப்பு விழாவும், ‘தமிழ்நிதி’ விருதுவழங்கல் நிகழ்வும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கொழும்புத் தமிழ்ச்சங்கப் புலமைக்குழுத் தலைவர் பேராசிரியர் சபா ஜெயராசா அவர்களின் தலைமையில் கொழும்பத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் செ.யோகராசா கலந்து கொள்ளவுள்ளார். ‘தமிழ்நிதி’ விருதினை அறிஞர் ‘தாமரைத் தீவான்’ பெற்றுக்கொள்வார். தமிழ்ப்பட்டயக் கற்கைநெறி மாணவர்கள் தமிழ் வாழ்த்தினை இசைப்பர்.

வரவேற்புரையை கொழும்புத் தமிழ்ச்சங்க பொதுச் செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை கந்தசாமி அவர்களும், தொடக்கவுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க தலைவர் திரு.தம்பு சிவசுப்பிரமணியம் அவர்களும், தலைமையுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க புலமைக்குழுத் தலைவர் பேராசிரியர் சபா அவர்களும், பிரதம விருந்தினர் உரையை பேராசிரியர் செ.யோகராசா அவர்களும், கௌரவிப்பு உரையை கொழும்புத் தமிழ்ச்சங்க மனித மேம்பாட்டுக்குழுச் செயலாளர் திரு.க.க.உதயகுமார் அவர்களும் நிகழ்த்துவர்.

கவிச்சரம் என்னும் நிகழ்வை பட்டயக்கற்கைநெறி மாணவர்கள் நிகழ்த்துவர். நன்றியுரையை கொழும்புத் தமிழ்ச்சங்க கல்விக்குழுச் செயலாளர் திரு.மா.கணபதிப்பிள்ளை அவர்கள் நிகழ்த்துவார். நிகழ்ச்சியை கொழும்புத் தமிழ்ச்சங்க இலக்கியக்குழுச் செயலாளர் சட்டத்தரணி திருமதி.சுகந்தி இராஜகுலேந்திரா தொகுத்து வழங்குவார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg